Tuesday, January 31, 2017

கீதாசாரம்



                          கீதாசாரம்                             

    

          எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
         
          எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது .

         எது நடக்க இருக்கிறதோ,

                                                 அது நன்றாகவே நடக்கும்,

          உன்னுடையது எதை இழந்தாய்,

                                                  எதற்காக அழுகிறாய்?

         எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

         எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு?

        எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

                                                   அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

        எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

        எது இன்று உன்னுடையதோ அது நாளை

                         மற்றொருவருடையதாகிறது

       மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்


       இந்த மாற்றம் உலக நியதியாகும்!


                                                                                 பகவான் ஸ்ரீகிஷ்ணர்

Monday, January 30, 2017

சித்தர்கள் அடக்கம் பெற்றத் தலம்


        சித்தன்


   1. அகத்தியர்       - அனந்த சயனம்
 
   2.அகப்பேய்         - அழகர் மலை

   3.அழுகண்ணர் -  அழகர் மலை

   4.இடைக்காடர்    - திருவண்ணாமலை

   5.கமலமுனி        -  திருவாரூர்

   6.கருவூரார்          - கருவூர்

   7. காளாங்கி நாதர்-காஞ்சீபுரம்

  8. குதம்பை         - மாயூரம்

   9. கொங்கணவர்- திருப்பதி

  10. கோரக்கர்     - பேரூர் கோவை

   11. சட்டநாதர்   - திருவரங்கம்

   12. சுந்தரானந்தர் - மதுரை

    13. தன்வந்திரி     - வைத்தீஷ்வரன் கோயில்

     14.திருமூலர்        - சிதம்பரம்

     15.தேரையர்   - பொதிகைமலை

     16. நந்தி       - காசி

      17. பதஞ்சலியார்- ராமேஷ்வரம்

     18. பாம்பாட்டி      -  விருத்தாசலம்

       19. புண்ணாக்கீசர் -  நாங்குனேரி

       20. புலஷ்தியர்   - யாழ்ப்பாணம்

      21. பூனைக்கண்ணர் - எகிப்து

      22. போகர்           - பழனி

      23. மச்சமுனி  -  திருப்பரங்குன்றம்

      24. வாமதேவர் - அழகர் மலை

      25. வான்மீகர்   - எட்டிக்குடி
சிவம்

   

Sunday, January 29, 2017

அகத்தியர் ஞானம்

சித்தன்




   சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு
                                                                              மதுதா னாச்சு:
 புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில்
                                                                   கோடியிலே யொருவ ருன்டு:
  பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார் பாழியிலி
                                                   மனத்தை விடார் பரம ஞானி:
   சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம் சுழியிலே
                                                       நிலையறிந்தால் மோட்சந்தானே
சிவம்
     
சித்தர்கள் பாடல்


       நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
           நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
       கொண்டு வந்தான் ஒரு தோண்டி -மெத்தக்
           கூத்தாடிக் கூத்தா போட்டுடைத்தாண்டி


          இந்தப் பாடலை இயற்றியர் யர் ஏன்பது தெரியாமலே
   பலர் பாடி மகிழ்கிறார்கள் . பலர் கேட்டுச்சிரிக்கிறார்கள் .
   ஆனால் இது கடுவளிச்சித்தரின் பாடல்  ஏன்பதோ
   சிந்தனைக்கு இடியுரை என்பதோ சிலருக்குத் தான்
   தெரியும் . குயவனாக உவமிக்கப்படும் பிரமனிடம் ஜிவன்
   என்னும் ஓர் ஆண்டி பத்து மாதமாக வேண்டிக் கருப்பையில்
   இருந்து உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து,
   உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கூத்தாடிக் கடைசியில்
   அந்த உடல் தோண்டியைப் போட்டுடைக்கிறான் என்கிற
   மாபெரும் தத்துவம் இந்தச் சிறு பாடலில் உள்ளடங்கியிருக்கிறது
அகத்தியர்
 
   

Saturday, January 28, 2017

Amman photos

Amman photos
Amman photos


Amman photos


Amman photos

Amman photos
தலைப்பைச் சேருங்கள்
Amman photos